இமயமலையில் மேக வெடிப்பு – நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி! பலர் மாயம்!

வட இந்தியாவின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர்.
ராம்பன் மாவட்டத்தின் ராஜ்கர் தாலுகாவை மேக வெடிப்பு தாக்கியதில் நான்கு கிராமவாசிகள் இறந்தனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் ரியாசி மாவட்டத்தின் தொலைதூரப் பகுதியான படேர் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று மண்ணில் புதையுண்டுள்ளதாக கூறப்பட்டது. இதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை இந்திய இமயமலையில் ஆகஸ்ட் 14 முதல் பெய்த பலத்த பருவமழையால் குறைந்தது 115 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)