ஐரோப்பிய நாடுகளை உலுக்கும் காலநிலை – வெப்ப அலையில் சிக்கித் தவிக்கும் மக்கள்

ஐரோப்பிய நாடுகள், சில வாரங்களாக கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலையில் சிக்கித் தவிக்கின்றன.
ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் வெப்ப அலையில் சிக்கித் தவிக்கின்றன. ஐரோப்பா கண்டம் உலக சராசரியை விட இரண்டு மடங்கு கூடுதலாக வெப்பமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு ஐரோப்பிய நகரங்களில் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியுள்ள நிலையில், இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இத்தாலியில் ரோம், மிலன் உள்ளிட்ட 17 நகரங்களுக்கு வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் வெப்பம் அதிகரிதது வருவதால் பிரான்ஸில் ஆயிர கணக்கான பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வெப்பம் அதிகரிக்கும்போது இரும்பு விரிவடைந்து கோபுரத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கருதுகின்றனர்.
இங்கிலாந்தில் 1884ம் ஆண்டுக்குப் பின்னர், தற்போதுதான் இந்தஅளவுக்கு வெப்பநிலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்பெயினில் நூறு ஆண்டுகளுக்குப் பின் கடும் வெப்பம் நிலவுகிறது. வெப்பத்தின் தாக்கத்தால் ஜெர்மனி மற்றும் துருக்கியில் காட்டுத் தீ ஏற்பட்டு சேதத்தை விளைவித்துள்ளது.
இத்தகைய வெப்ப அதிகரிப்புக்கு வெப்ப குவிமாடம் காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். ஐரோப்பாவின் மேல்பகுதியில் வெப்ப அழுத்த அமைப்பு தோன்றியிருப்பதாகவும், இது காற்றையும், ஈர மேகங்களையும் தடுப்பதால்தான் வெப்பநிலை உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர். காடுகள் அழிப்பு, தொழிற்துறை நடைமுறைகள், புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் ஆகியவற்றுடன் பருவநிலை மாற்றம்தான் வெப்பக் காற்றுக்கு காரணம் என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாகும்…