உத்தரபிரதேசத்தில் கல்லூரி வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்ட 11ம் வகுப்பு மாணவர்
உத்தரபிரதேசத்தில்(Uttar Pradesh) உள்ள கோரக்பூர்(Gorakhpur) கூட்டுறவு இன்டர் கல்லூரியில் பட்டப்பகலில் 11ம் வகுப்பு மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் பிப்ராய்ச்(Bibraich) காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட கர்வா(Karwa) கிராமத்தில் வசிக்கும் சுதிர் பாரதி(Sudhir Bharti) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேரில் கண்ட சாட்சிகளின்படி, சுதிர் தனது நண்பர்களுடன் கல்லூரி மைதானத்தில் நின்று கொண்டிருந்தபோது, மூன்று மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், சுதிர் மூன்று நாட்களுக்கு முன்பு தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனுடன் வாக்குவாதம் செய்ததால் பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.





