எலான் மஸ்குடன் வெடித்த மோதல் – டெஸ்லா காரை விற்றுவிட டிரம்ப் திட்டம்?

செல்வந்தர் எலான் மஸ்க் உடனான மோதலைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டெஸ்லா காரை விற்றுவிட முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மார்ச் மாதம் டெஸ்லா பங்குகள் சரிந்திருந்தபோது, அந்நிறுவனத்தின் எஸ்-மாடல் காரை பிரபலப்படுத்தும் விதமாக, டிரம்ப் அதனை வாங்கினார்.
தான் சலுகை பெற்றதாக சர்ச்சை எழுந்துவிடக்கூடாது என்பதற்காக முழு விலை கொடுத்து அதனை வாங்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தற்போது எலான் மஸ்குடன் வெடித்த மோதலுக்குப் பிறகும் அந்த கார் வெள்ளை மாளிகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
(Visited 25 times, 1 visits today)