உக்ரைன் – ரஷ்ய போரில் பொதுமக்களின் உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிப்பு
போரில் பொதுமக்களின் உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக உக்ரைனில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துளளது.
கடந்த மாதம், 158 பொதுமக்கள் இறப்புகள் மற்றும் 483 பேர் காயமடைந்தனர், இது கடந்த நவம்பரில் இருந்து 37 சதவீதம் அதிகமாகும்.
இதுவரை, இந்த மோதலில் 10,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 20,000 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துளளது.





