குடியுரிமை சட்டம் தமிழகத்தில் அமுற்படுத்தப்படாது : ஸ்டாலின் திட்டவட்டம்!

சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்தை இந்திய அரசாங்கம் மீளவும் கையில் எடுத்துள்ள நிலையில், இந்த சட்டமூலம் தமிழகத்தில் அமுற்படுத்தப்படமாட்டாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல என்றும், மதசார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் அரசியலுக்காக தற்போது இந்த சட்டமூலம் கையில் எடுக்கப்பட்டுள்ளதாக கருத தோன்றுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆகவே இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழகத்தில் இடமில்லை என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
(Visited 15 times, 1 visits today)