இலங்கை செய்தி

இலங்கை பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான சுற்றுநிருபம்!

இலங்கையில் அதிக வெப்பமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலைகளில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்கள் சில வௌியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அதிபர்களுக்கு அறிவிக்குமாறு அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, குறித்த அறிக்கையில் அதிக வெப்பமான வானிலை காரணமாக மாணவர்களுக்கு ஏற்படக்கூடும் நோய் நிலைமைகளும் அதற்கான முதலுதவிகள் குறித்தும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, அதிக வெப்பம் காரணமாக தசை பிடிப்பு, அதிக வேர்வை, மயக்கம் மற்றும் உடல் சோர்வு, உடல் வெப்பம் அதிகரிப்பு, வலிப்பு, தலைவலி, நினைவிழப்பு, நாடித் துடிப்பு அதிகரிப்பு ஆகிய ​நோய் நிலைமைகள் ஏற்படும் கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் விலகி நிழலான இடத்தில் ஓய்வெடுத்தல் மற்றும் போதுமான அளவு நீரினை அருந்துதல் ( 15 நிமிடத்திற்கு ஒரு தடவை அரை கோப்பை நீர்) போன்ற முதலுதவிகளை வழங்குமாறும் வலிப்பு, நினைவிழப்பு போன்ற நோய் நிலைமைகளின் போது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதிக வெப்பமான வானிலை நிலவும் போது திறந்தவௌியில்/ மைதானங்களில் செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்தல்.

மாணவர்கள் ஓய்வு பெறும் போது சூரிய ஔியில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

அதிகளவில் நீரினை பருக செய்ய வேண்டும் மற்றும் களைப்பினை தவிர்ப்பதற்காக இரண்டு குறுகிய ஓய்வு காலத்தினை வழங்குவது சிறந்தது.

மதியம் அதிக வெப்பம் நிலவும் வானிலையின் போது தேவையில்லாமல் வௌியில் அழைத்துச் செல்வதை தவிர்த்தல்.

( பாடசாலைகளை போன்று வீடுகளிலும்) அதிக வெப்பமான தினங்களில் வீடுட்டின் அருகில் உள்ள மைதானங்களில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!