அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவுக்கு CID அழைப்பாணை

கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் தொடர்பாடல் குழு உறுப்பினர் Fr. சிறில் காமினி பெர்னாண்டோவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
ஞானார்த்த பிரதீப்யா என்ற சிங்கள கத்தோலிக்க வார இதழின் ஆசிரியருமான அருட்தந்தை பெர்ணான்டோ , ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சில விவரங்கள் தனக்குத் தெரியும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நம்புவதால் தமக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அருட்தந்தை பெர்னாண்டோ 2021 நவம்பர் 3 முதல் 8 வரையான காலப்பகுதியிலும் சிஐடியால் அழைக்கப்பட்டதுடன் அந்த ஆண்டில் அவர் கைது செய்யப்படுவதற்கு எதிராக தடை உத்தரவைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)