இலங்கை

வவுனியா இரட்டை கொலை-தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வாகனங்களை மீட்ட CID

வவுனியாவை அதிரவைத்த இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர்கள் பயன்படுத்திய வாகனங்கள் குற்ற புலனாய்வுத் திணைக்களத்தினால் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு ஒன்றில் நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேக நபருக்கு சொந்தமானதும், குறித்த குற்றச்செயலுக்கு பயன்படுத்தியதாகவும் சந்தேகிக்கப்படும் வாகனங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது டிப்பர், பட்டா ரக வாகனம் மற்றும் இரண்டு மோட்டார்சைக்கிள் என்பன குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைவிசாரணை பிரிவினரால் நேற்று மாலை (16.08) மீட்கப்பட்டுள்ளன.

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்