சனத் நிஷாந்தவின் காருடன் மோதிய கொள்கலனின் சாரதியிடம் சிஐடி விசாரணை!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த காருடன் மோதி விபத்துக்குள்ளான கொள்கலன் வாகன சாரதியிடம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியின் மரணம் தொரப்பில் விசாரணைகள் மேற்கெகாள்ளப்பட்டன.
இன்று திங்கட்கிழமை (12) குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலமளித்துள்ளார்.
குறித்த சாரதி சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற விதம் சந்தேகத்துக்குரியதாக இருப்பதால், விபத்து குறித்து முறையான விசாரணை நடத்துமாறு கோரி நிஷாந்தவின் மனைவி திருமதி சாமரி பிரியங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி அதிகாலை கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.01 கிலோமீற்றர் மைல்கல் அருகில், கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் ரக வாகனம், அதே திசையில் அதற்கு முன்னால் சென்ற கொள்கலன் வாகனத்துடன் மோதி, பின்னர் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்து ஏற்பட்டிருந்தது.
விபத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் ஒருவரும் உயிரிழந்தார்.