உலக தலைவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி வழங்கிய கிறிஸ்துமஸ் பரிசுகள்
கென்யாவில்(Kenya) உள்ள ரஷ்ய(Russia) தூதரகம், ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) கிறிஸ்துமஸ் தாத்தாவாக உலகத் தலைவர்களுக்கு பரிசுகளை வழங்கும் செயற்கை நுண்ணறிவால்(artificial intelligence) உருவாக்கப்பட்ட ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
அதில், “கிறிஸ்துமஸ் காலம் என்பது நன்கொடை அளிக்கும் நேரம், ரஷ்யா தனது அனைத்து நண்பர்களுக்கும் ஏதாவது நல்லதை கொடுத்து நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை உறுதி செய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த வீடியோ பதிவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு(Narendra Modi) ஒரு ரஷ்ய ஸ்டெல்த் போர் விமானத்தை(Russian stealth fighter jet) பரிசாக வழங்குவது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது.
மேலும், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு(Volodymyr Zelensky) ஒரு ஜோடி கைவிலங்குகளை(handcuffs) வழங்குவது போல் காட்டப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து, டிரம்ப்(Trump) அலாஸ்காவில்(Alaska) புடினுடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சட்டகம்(Frame) செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
சீன(China) ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு(Xi Jinping) சீன யுவான் மற்றும் ரஷ்ய ரூபிள் ஆபரணங்களை பரிசாக வழங்கப்பட்டது.
துருக்கிய(Turkey) ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன்(Recep Tayyip Erdoğan), ரஷ்யாவால் கட்டப்பட்ட துருக்கியின் அணு மின் நிலையத்தைக் குறிக்கும் “அக்குயு”(Akuyu) கொண்ட ஒரு பனி உருண்டை வழங்கப்பட்டுள்ளது
வட கொரிய(North Korea) தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு(Kim Jong-un) “நன்றியுடன் ரஷ்யாவிலிருந்து” என்ற குறிப்புடன் ஒரு வாள் வழங்கப்பட்டுள்ளது.




