திருமணம் செய்வதனை தவிர்க்கும் சீன இளைஞர் – யுவதிகள்! குறையும் மக்கள் தொகை
சீன இளைஞர் யுவதிகளின் திருமணம் வெகுவாக குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் சீனா வெளியிட்ட தரவுகளின்படி, சீனாவில் உள்ள 25 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர் சமூகத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 2023ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பார்கள் என்று தெரியவந்துள்ளது.
பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் மக்கள் தொகை அடிப்படையில் சீனா கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டமே அவர்கள் திருமணத்தை தள்ளிப்போடுவதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி மற்றும் பல சீன இளம் யுவதிகள் மற்றும் இளைஞர்கள் தங்கள் திருமண வாழ்க்கையை ஒப்பிடும் போது வேலையில் பிணைக்கப்பட்டுள்ளமையும் நாட்டில் திருமண வீதத்தில் வீழ்ச்சியை பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.