உடல் எடையைக் குறைக்க சீனப்பெண் எடுத்த நடவடிக்கை – கோபத்தில் இணைய பயனாளர்கள்

சீனாவின் Zhejian பகுதியை சேர்ந்த Shang என்ற பெண் உடல் எடையைக் குறைப்பதற்காக மேற்படிப்பைக் கைவிட்டிருக்கிறார்.
90 கிலோகிராமில் இருந்த எடை இப்போது 65 கிலோகிராமாகியுள்ளது. தம்முடைய முடிவுக்கு வருந்தவில்லை என்று ஷாங் கூறியுள்ளார்.
மேற்படிப்பைத் தொடங்கிய ஆறு மாதங்களில் அவரது எடை 10 கிலோகிராம் கூடியது.
தமது ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளானதைக் கருத்தில்கொண்டு படிப்பைக் கைவிட்டதாக ஷாங் கூறினார்.
கிட்டத்தட்ட ஓராண்டாக உடற்பயிற்சி செய்யும் அவரது கடின உழைப்புக்குப் பலன் கிடைத்தது. அவர் தனது எடையைக் குறைத்தார்.
அவரது கதை பல இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது. அவரது முயற்சியைப் பாராட்டியவர்கள் ஒருபுறம் இருக்க வேறுசிலர் படிப்பைக் கைவிட்டுத்தான் இலக்கை அடைய வேண்டுமா எனக் குறைகூறியிருந்தனர்.
(Visited 20 times, 1 visits today)