சீனாவில் திருமணத்தைப் பதிவுசெய்யச் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

சீனாவின் குவாங்சி பகுதியில் தமது திருமணத்தைப் பதிவுசெய்யச் சென்ற பெண், ஏற்கனவே 6 முறை திருமணம் செய்துள்ள பதிவுகள் கிடைத்துள்ளது.
இதனை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். 33 வயதான அந்தப் பெண் மணமகனுடன் திருமணப் பதிவகத்திற்குச் சென்றார்.
அங்கு 2013ஆம் ஆண்டிற்கும் 2014ஆம் ஆண்டிற்குமிடையே அந்தப் பெண்ணின் பெயரில் 6 திருமணங்கள் பதிவானது தெரியவந்தது.
ஏற்கனவே திருமணமானவர் என்ற பதிவுள்ளதால் அவர் அன்று திருமணம் செய்யமுடியாது என்று அதிகாரிகள் கூறினர்.
ஆனால் அந்தத் திருமணங்கள் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும் அவை நடைபெற்ற இடங்களுக்கு இதுவரை சென்றதில்லை என பெண் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2013ஆம் ஆண்டு மே மாதம் தமது அடையாள அட்டை தொலைந்துபோனதை அவர் நினைவுகூர்ந்தார்.
அதன் மூலமாகத் தமது விவரங்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதை உணர்ந்தார்.
பொலிஸாரின் விசாரணையில் அந்தப் பெண்ணின் விவரங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது உறுதியானது.
இந்த நிலையில் அந்த பெண் அதிகாரபூர்வமாகத் திருமணம் ஆகாதவர் என்று அறிவிக்கப்பட்டு அவரது திருமணம் பதிவுசெய்யப்பட்டது.