இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

கைகுலுக்க முயன்ற பாகிஸ்தான் பிரதமரை கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற சீன ஜனாதிபதி

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எதிர்கொண்ட தர்மசங்கடமான நிகழ்வு இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் சீனா-பாகிஸ்தான் இடையேயான உறவை வலுப்படுத்தவும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் இரண்டாம் கட்டம் உள்ளிட்ட முன்னெடுப்புகள் குறித்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்றார்.

இந்த மாநாட்டின் போது தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்த பிறகு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை நோக்கி ஷெபாஸ் ஷெரீப் கைகுலுக்க முயன்றார்.

ஆனால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் உரையாடலில் ஆழ்ந்திருந்த ஜி ஜின்பிங், ஷெரீப்பைக் கவனிக்காமல் கடந்து சென்றார்.

இந்த நிகழ்வு ஒரு காணொலியாக இணையத்தில் பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

சமூக வலைதளவாசிகள் பலரும், ஷெரீப்பின் செயல் பரிதாபகரமானது என்றும், உலக அரங்கில் பாகிஸ்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கடுமையாக விமர்சித்தனர்.

இதே மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினை வாழ்த்துவதற்காக ஷெரீப் அவசரமாக ஓடியதும் இணையத்தில் விமர்சனத்துக்குள்ளானது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் தூதரக முயற்சிகளை விட அவரது நடத்தை மீதான பொது மற்றும் அரசியல் விமர்சனங்களே ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி