தடைகளை மீறி ரஷ்யாவிற்கு உதவியதாக சீன ட்ரோன் நிபுணர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

மேற்கத்திய தடைகளின் கீழ் உள்ள ரஷ்ய அரசுக்கு சொந்தமான ஆயுத உற்பத்தியாளருடன் சீன ட்ரோன் நிபுணர்கள் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அறிக்கைகளின்படி, 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து சீன நிபுணர்கள் இராணுவ ட்ரோன்களின் மேம்பாடு, சோதனை மற்றும் தொழில்நுட்ப பணிகளுக்கு உதவி வழங்க IEMZ குபோல் தொழிற்சாலைக்கு பல முறை சென்றுள்ளனர்.
தடைசெய்யப்பட்ட ரஷ்ய இடைத்தரகர் மூலம் குபோல் நிறுவனம் சீனாவில் தயாரிக்கப்பட்ட பல தாக்குதல் மற்றும் கண்காணிப்பு ட்ரோன்களையும் பெற்றதாக ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
ராய்ட்டர்ஸ் ஆவணங்களின்படி, சிச்சுவான் AEE மற்றும் ஹுனான் ஹாட்டியான்யி போன்ற சீன நிறுவனங்கள் ரஷ்ய அமைப்புகளுக்கு A140, A900, A60, A100, A200 போன்ற மேம்படுத்தப்பட்ட அணுசக்தி தாக்குதல் ட்ரோன்கள் மற்றும் உதிரி பாகங்களை வழங்குகின்றன என்று செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.
சீன நிபுணர்கள் ட்ரோன்களை நிலைநிறுத்தி, குபோல் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து, செபர்குல் போன்ற ரஷ்ய சோதனை தளங்களை பார்வையிட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, சீன வெளியுறவு அமைச்சகம் “எந்த ஆயுதப் பரிமாற்றமும் நடக்கவில்லை” என்று வலியுறுத்தியது, அதே நேரத்தில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், குபோல் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் பதிலளிக்கவில்லை.