ஆசியா

சீனாவின் “பாரிய” இராணுவக் குவிப்பு தைவான் மீதான மோதலின் அபாயத்தை எதிரொலிக்கிறது – மார்க் ரூட்டே!

சீனாவின் “பாரிய” இராணுவக் குவிப்பு தைவான் மீதான மோதலின் அபாயத்தை அதிகரித்துள்ளது என்றும், ரஷ்யாவை ஈர்க்கும் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பைப் பாதிக்கும் என்றும் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே கூறியுள்ளார்.

ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை இப்போது நேட்டோவுடன் நெருக்கமாக இணைந்துள்ளன.

இந்நாடுகள் சீனாவின் இராணுவ குவிப்பு மற்றும் அது ஏற்படுத்தும் அச்சுறுத்தல், குறிப்பாக தைவான் தொடர்பாக, ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

“ஜப்பான் மற்றும் கொரியா குடியரசு, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் எங்களுக்கு இந்த நெருங்கிய உறவு உள்ளது, ஏனெனில் இந்த நாடுகள் தற்போது சீனாவில் நடைபெற்று வரும் பாரிய இராணுவக் குவிப்பு குறித்து மிகவும், மிகவும் கவலைப்படுகின்றன,” என்று ஹேக்கில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிற்கு முன்னதாக அவர் கூறினார்.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்