பிலிப்பைன்ஸை மீண்டும் சீண்டிப்பார்க்கும் சீனா – அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை
சீனா தனது விமானம் தாங்கி கப்பலான ஷென்டாங்கை பிலிப்பைன்ஸ் கடற்பகுதி கடலில் நிலைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலோரப் பகுதிக்கான தனது உரிமையை உறுதிப்படுத்தும் பிலிப்பைன்ஸின் முயற்சிகளை இது முடுக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
70,000 டன் எடையுள்ள விமானம் தாங்கி போர்க்கப்பலான ஷென்டாங், தென் சீனக் கடலில் உள்ள சீன தீவுகள் மற்றும் திட்டுகளுக்கு அருகில் பிலிப்பைன்ஸ் ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக ஒரு தடுப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது.
எனினும், அந்தக் கப்பல் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் ரோந்து செல்வதைக் காணக்கூடியதாக இருந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், மேற்கு பசிபிக் பிராந்தியத்திற்கு நீண்ட தூர பயணத்திற்கு விமானம் தாங்கி கப்பல் தயாராகி வருவதாக சீன நிபுணர்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸுடனான கடல் பிராந்திய மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தென் சீனக் கடலில் பெரிய மற்றும் நடுத்தர அளவிலான இராணுவக் கப்பல்களை நிலைநிறுத்துவதை சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் சீனக் கடலில் தாமஸ் ஷோல் தொடர்பான பதட்டங்களுக்கு மத்தியில் சீனா தனது பிராந்திய கடல் இறையாண்மையைப் பாதுகாக்க உறுதியாக இருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.