தைவானுக்கு நெருக்கடி கொடுக்கும் சீனா : பொருளாதாரத்தை முடக்க திட்டம்!
தைவனின் பழங்கள், காய்கறிகள், கடல் உணவுகள் மற்றும் பிற பொருட்களின் இறக்குமதிக்கு சீனா தடை விதித்துள்ளது. இந்தத் தடையானது அடுத்த வாரம் அமலுக்கு வரும்.
இந்நிலையில் இந்த தடையானது வர்த்தக விதிகளை மீறுவதாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது.
இரு தரப்பினரும் உறுப்பினர்களாக உள்ள உலக வர்த்தக அமைப்பால் வகுக்கப்பட்ட விதிகளை புறக்கணிப்பதாக தைவான் அரசாங்கத்தின் மெயின்லேண்ட் விவகார கவுன்சில் தெரிவித்துள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கை தைவான் ஜலசந்தியின் இருபுறமும் உள்ள விவசாயிகளின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்த எதுவும் செய்யவில்லை என்றும் கவுன்சில் கூறியது.
தைவான் அரசாங்கத்தின் மீது வளர்ந்து வரும் இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
தைவானின் அரை வெப்பமண்டல காலநிலை மற்றும் வளமான மண் ஆகியவை சுமார் $500 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள விவசாயத் தொழிலை வளர்த்துள்ளன.