பாகிஸ்தானுக்கு 4.8 பில்லியன் டொலர்களை வழங்கும் சீனா!
பாகிஸ்தானுக்கும் – சீனாவுக்கும் இடையில் அணுமின் நிலையத்தை உருவாக்குவது குறித்து புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.
4.8 பில்லியன் டொலர் மதிப்பில் உருவாகும், இந்த திட்டம் கையெழுத்தாகியுள்ள நிலையில், சாஷ்மா 5 திட்டத்தின் பணிகள் உடனடியாக தொடங்கும் என்று அந்நாட்டின் பிரதமர் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் மொத்த அணுசக்தி உற்பத்தி திறன் 1,400 மெகாவாட்டாக உயர்ந்தது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் ஆறாவது அணுமின் நிலையம் திறக்கப்பட்டது.
மேலும் தெற்கு துறைமுக நகரமான கராச்சியில் அமைந்துள்ள அந்த 1,100 மெகாவாட் ஆலையும் சீன உதவியுடன் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)