தைவானில் பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு சீனா எச்சரிக்கை!

தைவானில் பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு சீனா வெளியுறவு அமைச்சர் குயின் கேங் தெரிவித்துள்ளார்.
சீன வெளியுறவு மந்திரி குயின் கேங் அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போதே அவர் மேற்படி வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், சீனாவின் பாதுகாப்பு, இறையாண்மை போன்றவற்றின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தைவானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கிடையே தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது.
அதன் ஒருபகுதியாக சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து தைவான் வான் எல்லைக்குள் சீனா தனது போர் விமானங்களை பறக்க விட்டு அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.