இலங்கை

இராணுவ விநியோக மையமாக இலங்கையை பயன்படுத்தும் சீனா – அமெரிக்கா அவதானம்

சீனா அதன் இராணுவ விநியோக மையமாக இலங்கையை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் அந்நாட்டு காங்கிரசுக்கு அனுப்பியுள்ள வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சீனாவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் இலங்கை உள்ளிட்ட 18 நாடுகளை சீனா அதன் உலக இராணுவ விநியோக மையங்களாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா அதன் வெளிநாட்டு விநியோகங்கள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் இராணுவ பலத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உலகளாவிய இராணுவ நடவடிக்கைகளுக்கு இது இடையூறாக அமையலாமெனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Djibouti நாட்டை முப்படைகளுக்குமான இராணுவ விநியோக வசதிகளை வழங்கும் மையமாக மாற்றுவதற்கும் சீனா திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கம்போடியாவின் Ream கடற்படைத் தளத்தின் ஒரு பகுதியை அணுகுவதற்கான இயலுமை சீனாவிற்கு கிடைத்துள்ளமை 2022 இல் உறுதி செய்யப்பட்டதாகவும் அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content