உலகின் மிக நீளமான விமான பயணத்தை ஆரம்பிக்கும் சீனா!

உலகின் மிக நீளமான விமானப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சீன விமான நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
இதன் பயணம் சுமார் 29 மணிநேரம் ஆகும். சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் டிசம்பர் 04 ஆம் திகதி முதல் பயணத்தை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பியூனஸ் அயர்ஸ் மற்றும் ஷாங்காய் இடையே MU746 மற்றும் MU745 விமானங்களைத் தொடங்கும் என்று விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இது 12,500 மைல்களைக் கடக்கும், இது முழு உலகின் சுற்றளவின் பாதி ஆகும்.
(Visited 2 times, 2 visits today)