தைவானை மிரட்டும் சீனா – அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு கோரிக்கை
தைவான் ஜனாதிபதி லாய் சிங்-தே (வில்லியம் லாய்) தனது நாட்டுக்கு எதிரான இராணுவ மற்றும் அரசியல் அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு சீனாவைக் கேட்டுக் கொண்டார்.
நெருக்கடிக்கு அமைதிதான் தீர்வு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தைவான் மக்களின் விருப்பத்திற்கு சீனா மதிப்பளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தைவான் அதிபர் வில்லியம் லாய் சீனாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
“தைவானை அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் மிரட்டுவதை நிறுத்தவும், தைவான் ஜலசந்தி மற்றும் பிராந்தியம் முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேண கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், உலகம் போர் அச்சத்திலிருந்து விடுபடுவதை உறுதிசெய்ய தைவானுடன் உலகளாவிய பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் நான் சீனாவை அழைக்க விரும்புகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.