அடுத்த வாரம் சீனாவிற்கு விஜயம் செய்யும் இலங்கை பிரதமர்!
பிரதமர் தினேஸ் குணவர்தன அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பெய்ஜிங்கின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச சபையின் பிரதமர் லீ கியாங்கின் அழைப்பின் பேரில், இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மார்ச் 25 முதல் 30 வரை சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை செலுத்த வேண்டிய மொத்த வெளிநாட்டு கடனில் சீனா 10 சதவீதத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் தினேஸ் குணவர்தன , சீனத் தலைவர் ஷி ஜின்பிங்கைச் சந்தித்து, “சீனா-இலங்கை பாரம்பரிய நட்புறவு தொடர்வது குறித்த ஆழமான கருத்துப் பரிமாற்றம்”க்காகச் சந்திப்பார் என்று பெய்ஜிங், தெரிவித்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் கூறுகையில், “சீனா-இலங்கை உறவுகளை மேம்படுத்துவதற்கு சீனா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. என்றார்.
மேலும் பெய்ஜிங்குடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட மற்றொரு தெற்காசிய நாடான நேபாளத்தின் வெளியுறவு அமைச்சர் வருகை தருவார் என்றும் சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது.
“நாராயண் காஜி ஷ்ரேஸ்தா மார்ச் 25 முதல் ஏப்ரல் 1 வரை சீனாவுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் செய்வார்” என்று லின் கூறியுள்ளார்.