ஆசியா

வாடகை அப்பா சேவையை அறிமுகம் செய்துள்ள சீனா!

வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு குளியல் இல்லம் (Bath House) ஒன்றில் வாடகை அப்பா என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. ‘Rent a Dad’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவை மூலம், தாயுடன் வரும் மகன்களை குளிக்க வைப்பது, கவனித்துக் கொள்வது போன்றவற்றை வாடகை அப்பாக்கள் செய்வார்கள்.

அதாவது, தாய் குளிக்கும் வரை இந்த குழந்தைகளை வாடகை தந்தைகள் கவனித்துக் கொள்கிறார்கள். மேலும், அந்த குழந்தைகளுக்கு உடை மாற்றி விடுவது என அனைத்தையும் கவனித்து கொள்கிறார்கள். குறிப்பாக, இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த சேவைக்கு பலர் வரவேற்ப்பு அளித்துள்ளனர்.

China: Bathhouse provides 'rent-a-dad' service to keep young boys out of women-only areas - World News

பெண்களுக்கு மட்டும் உள்ள பகுதிகளில், சிறுவர்கள் நுழைவதை தடுக்க இச்சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் தன் மகனுடன் இங்கு வந்தால், தன் மகனை வாடகை தந்தை என அழைக்கப்படும் நபரிடம் ஒப்படைத்து, நீச்சல் குளத்தில் சுதந்திரமாக நீந்தி மகிழலாம். வாடகைத் தந்தை அதுவரை உங்கள் மகனைக் கவனித்து, ஆண்கள் குளிப்பதற்கு அழைத்துச் செல்வார் என்று அந்த குளியல் இல்லம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கு ஆண் மற்றும் பெண் சிறுவர்களுக்கான தனித்தனி அறைகளையும், உணவு, பானங்கள், மசாஜ்கள், பொழுதுபோக்கு மற்றும் பிற வசதிகளை அனுபவிக்கக்கூடிய யுனிசெக்ஸ் லவுஞ்ச் பகுதியையும் வழங்குகின்றதாம் இந்த சேவை.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்