உலகம் செய்தி

அமெரிக்காவிற்கு போட்டியாக சீனா களமிறக்கியுள்ள புதிய கப்பல்!

சீனாவின் மிகவும் திறமையான விமானம் தாங்கி கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று அதிகாரப்பூர்வமாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இது கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவை முந்திக்கொள்ளும் முயற்சியில் சீனாவிற்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனத் தலைவர் ஜி ஜின்பிங் ( Xi Jinping) இந்த வார தொடக்கத்தில் ஹைனான் (Hainan) தீவில் உள்ள துறைமுகத்தில் குறித்த கப்பலை பார்வையிட்டதுடன், அதனை இயக்கும் விழாவிலும் கலந்துகொண்டார்.

ஃபுஜியன் (Fujian)  சீனாவின் மூன்றாவது மற்றும் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலாகும், இதில் மூன்று வகையான விமானங்களை ஏவக்கூடிய மின்காந்த கவண்கள் உள்ளன என்று சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

EMALS எனப்படும் புதிய தொழில்நுட்பம், விமானங்கள் அதிக ஆயுதங்களை சுமந்து செல்ல அனுமதிக்கிறது.  இதனால்   அதிக தொலைவில் உள்ள எதிரி இலக்குகளைத் தாக்க முடியும் எனவும் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

EMALS அமைப்பைக் கொண்ட உலகின் ஒரே விமானம் தாங்கி கப்பல், அமெரிக்க கடற்படையின் புதிய கேரியரான USS ஜெரால்ட் ஆர் ஃபோர்டு (USS Gerald R Ford) ஆகும். தற்போது அந்த தொழில்நுட்பத்துடன் சீனா வடிவமைத்துள்ள இந்த கப்பல் அமெரிக்காவிற்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!