பிலிப்பைன்ஸ் கப்பல் மீது நீர் தாக்குதல் மேற்கொண்ட சீனா
சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே சர்ச்சைக்குரிய சூழல் நிலவி வருகிறது.
பிலிப்பைன்ஸ் இராணுவத்திற்கு உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல்கள் மீது சீன கடலோர காவல்படை நீர் தாக்குதல்களை நடத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக சீனாவுக்கு பிலிப்பைன்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சம்பவம் குறித்து விசாரிக்க பிலிப்பைன்ஸின் சீன தூதுவர் வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், பிலிப்பைன்ஸ் கப்பல்கள் தனது பிராந்திய கடற்பரப்பை மீறியதாக சீனா கூறுகிறது, எனவே தேவையான கட்டுப்பாடுகளை எடுத்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்ச்சைக்குரிய கடல் வலயத்தில் நடத்தப்பட்டு வரும் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட நிலத்தடி போர்க்கப்பலை மீளப் பெறுமாறு பிலிப்பைன்ஸுக்கு சீனா அறிவித்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.