அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

செயற்கை நுண்ணறிவுக்கான (AI) கடுமையான விதிகளை அறிமுகப்படுத்திய சீனா!

செயற்கை நுண்ணறிவு (AI)க்கான கடுமையான புதிய விதிகளை சீனா முன்மொழிந்துள்ளது.

குழந்தைகளுக்கு பாதுகாப்புகளை வழங்கவும், சுய-தீங்கு அல்லது வன்முறைக்கு வழிவகுக்கும் ஆலோசனைகளை சாட்போட்கள் வழங்குவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின் கீழ், டெவலப்பர்கள் (developers) தங்கள் AI மாதிரிகள் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் உள்ளடக்கத்தை உருவாக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

சீனாவிலும் உலகெங்கிலும்  சாட்போட்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பானது, பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

இந்நிலையிலேயே சீனா புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதற்கமைய AI நிறுவனங்கள் தனிப்பயனாக்கப்பட்ட அமைப்புகளை வழங்க வேண்டும், பயன்பாட்டிற்கு நேர வரம்புகள் இருக்க வேண்டும் மற்றும் உணர்ச்சிபூர்வமான தோழமை சேவைகளை வழங்குவதற்கு முன்பு பாதுகாவலர்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் ஆகிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பயனரின் பாதுகாவலருக்கு அல்லது அவசர தொடர்புக்கு உடனடியாகத் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

AI வழங்குநர்கள் தங்கள் சேவைகள் “தேசிய பாதுகாப்பை ஆபத்திற்குள்ளாக்கும், தேசிய மரியாதை மற்றும் நலன்களை சேதப்படுத்தும் அல்லது தேசிய ஒற்றுமையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் உள்ளடக்கத்தை” உருவாக்கவோ அல்லது பகிரவோ கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!