உக்ரைனில் அமைதியை கொண்டுவரும் முயற்சியில் சீனா

உக்ரைனில் அமைதியைக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு அனைத்து வகையிலும் தாங்கள் ஆதரவு வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.
எனினும் அரசியல் வர்த்தகத்தில் காஸாவும் மேற்குக் கரையும் பேரம் பேசும் சில்லுகள் அல்ல என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறியுள்ளார்.
ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தில் சந்திப்பு ஒன்றை வழிநடத்திய வாங் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காஸா சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்வைப் புறக்கணிக்க முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் காஸா மக்களை அங்கிருந்து வெளியேற்றவேண்டும் என்று கூறிவரும் வேளையில் திரு வாங்கின் கருத்துகள் வெளிவந்துள்ளன.
(Visited 1 times, 1 visits today)