உலகம் செய்தி

தைவானை தண்டிக்க ஆரம்பித்துள்ள சீனா

தைவானின் புதிய அதிபர் பதவியேற்று மூன்று நாட்களுக்குப் பிறகு, சீனா தைவானைச் சுற்றி இராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.

தைவானின் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு தண்டனையாக இந்த பயிற்சி தொடங்கப்பட்டதாக சீன இராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று (23ம் தேதி) காலை தைவான் தீவு மற்றும் தைவான் கட்டுப்பாட்டில் உள்ள கின்மென், மட்சு, வுகியு, டோங்கியின் தீவுகளை சுற்றி இந்த ராணுவ பயிற்சிகள் தொடங்கப்பட்டன.

எவ்வாறாயினும், இந்த இராணுவப் பயிற்சிகள் தேவையற்ற ஆத்திரமூட்டல் என தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தைவானின் இறையாண்மையைப் பாதுகாக்க கடற்படை, வான் மற்றும் தரைப்படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

துல்லியமான இலக்குகளைத் தாக்கும் திறனையும், கடல் மற்றும் வான்வழியாகப் போரிடத் தயாராக இருப்பதையும் சோதிக்க இந்தப் பயிற்சிகளை நடத்துவதாக சீன ராணுவம் கூறுகிறது.

தைவானின் சுதந்திரப் படைகளின் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கான தண்டனையாகவும், வெளிச் சக்திகளின் தலையீட்டிற்கு எதிரான வலுவான எச்சரிக்கையாகவும் இது செயல்படுத்தப்படுவதாக அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

(Visited 12 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி