தைவானை நோக்கி ரொக்கெட்டுகளை ஏவிய சீனா – ட்ரம்ப் வெளியிட்ட கருத்து!
தைவானைச் சுற்றி சீனாவின் இராணுவப்படைகள் முன்னெடுக்கும் போர் பயிற்சிகள் குறித்து தான் கவலைப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா, தைவானுக்கு இராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்த சில நாட்களில் சீனா போர் பயிற்சிகளை முன்னெடுத்துள்ளது.
இன்றைய போர் பயிற்சியின்போது சீனா, தைவானை நோக்கி ரொக்கெட்டுகளை ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், இராணுவப் பயிற்சிகள் குறித்து தனக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை, ஆனால் சீனா வழக்கமாக கடற்படைப் பயிற்சிகளை நடத்துவதால் தான் கவலைப்படவில்லை என்றார்.
இதேவேளை போர் பயிற்சி தொடர்பில் சீன இராணுவத்தின் கிழக்கு தியேட்டர் கட்டளை வெளியிட்டுள்ள பதிவில், கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகள் தைவானின் வடக்கு மற்றும் தெற்கில் கடல் மற்றும் வான்வழி இலக்குகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும், தீவைச் சுற்றியுள்ள ஐந்து இடங்களில் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி வரை நேரடி துப்பாக்கிச் சூடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





