இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ரஷ்யா தோற்றால் அமெரிக்காவால் தாம் குறி வைக்கப்படலாம் என சீனா அச்சம்!

ரஷ்யா – உக்ரைன் போர் முடிவடைந்தால், சீனாவின் பக்கம் அமெரிக்காவின் கவனம் திரும்பி விடும் என்று சீன அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான போரை நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை எதுவும் ஒரு முடிவைக் கொண்டு வரவில்லை.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசுகையில்,

உக்ரைனுடனான போரில் ரஷ்யா தோல்வியடைவதை சீனா விரும்பவில்லை. ஏனெனில், ரஷ்யா தோல்வியடைந்தால், அதன் பின்னர் சீனாவின் பக்கம் அமெரிக்காவின் முழுக் கவனமும் திரும்பி விடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வாங் யி-யின் கருத்துகள் குறித்து சீனாவின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்கள் வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அவ்வாறு இருந்தால், போர் இதுவரை நீண்டிருக்காது என்று கூறினார்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்