கடுமையான வானிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் சீனா!
சீனா தீவிர வானிலை மாற்றங்களை எதிர்கொள்கிறது. சீனாவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பெருமளவான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சீனாவின் உச்ச மழைக்காலம் பொதுவாக ஜூலை பிற்பகுதியில் நிகழ்கிறது,
ஆனால் இம்முறை ஜுலை மாதத்திற்கு முன்னதாக கடுமைய மழை, மற்றும் வெப்பத்தையும் எதிர்கொண்டது.
வடமேற்கு ஜின்ஜியாங் மற்றும் அண்டை மாநிலமான கன்சு மாகாணம் போன்ற உள்நாட்டுப் பகுதிகள் 35 டிகிரி செல்சியஸ் (95 டிகிரி பாரன்ஹீட்) மற்றும் அதற்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சீனாவில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் கோடை காலத்தில் பல நகரங்களில் மீண்டும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
(Visited 5 times, 1 visits today)