அமெரிக்காவில் காரில் விடப்பட்டுச் சென்ற குழந்தை உயிரிழப்பு
11 மாதக் குழந்தை ஒன்று தேவாலயத்தின் ஆராதனைக்குச் சென்றபோது, பெற்றோர் அவளை காரினுள் விட்டுச் சென்றதால், உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
வாஷிங்டன் டி.சி.க்கு தெற்கே 900 கி.மீ தொலைவில் உள்ள பாம் பேயில் உள்ள மவுண்ட் ஆஃப் ஆலிவ்ஸ் எவாஞ்சலிக்கல் பாப்டிஸ்ட் தேவாலயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பொலிசார் வந்தபோது குழந்தை பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற உடனேயே குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பொலிஸ் அறிக்கையின்படி, குழந்தையின் பெற்றோர் தேவாலயத்திற்குச் சென்றபோது குழந்தை தற்செயலாக சுமார் மூன்று மணி நேரம் காரில் விடப்பட்டுள்ளனர்.
“இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம், எங்கள் இரங்கலும் பிரார்த்தனைகளும் குடும்பத்திற்குச் செல்கின்றன” என்று பாம் பே காவல்துறைத் தலைவர் மரியோ ஆகெல்லோ கூறினார்.
சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்களா என்று பொலிசார் கூறவில்லை.
அமெரிக்காவில், இதுபோன்ற சம்பவங்கள் பல நடந்துள்ளன. நாடு முழுவதும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 38 குழந்தைகள் இதுபோன்ற சம்பவங்களால் உயிரிழப்பதாக கூறப்படுகின்றது.