சீனாவை உலுக்கிய சிக்குன்குனியா – ஆயிர கணக்கானோர் பாதிப்பு

தென் சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் நுளம்புகளால் பரவும் சிக்குன்குனியா நோய்த் தொற்றுகள் கடந்த சில வாரங்களில் வேகமாக அதிகரித்து, பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்த வைரஸ், சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட நுளம்புகள் கடித்ததன் மூலம் மனிதர்களிடம் பரவுகிறது.
காய்ச்சல் மற்றும் கடுமையான மூட்டு வலி போன்ற அறிகுறிகளை இது ஏற்படுத்துகிறது. எனினும், இறப்புகள் குறைவாகவே நிகழ்கின்றன என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சீனாவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
குவாங்டோங் அதிகாரிகள் குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டில் பூந்தொட்டிகள், காபி இயந்திரங்கள் மற்றும் உபரி போத்தல்கள் போன்ற இடங்களில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.
இது கடுமையாக மீறப்பட்டால், 10,000 யுவான் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.