வடகரோலினாவில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய ChatGPT : குவியும் பாராட்டு!

40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதை ChatGPT துள்ளியமாக கண்டுப்பிடித்ததை தொடர்ந்து அவரது உயிர் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வட கரோலினாவிற்கும் அமெரிக்க விர்ஜின் தீவுகளுக்கும் இடையில் வசிக்கும் பெண் ஒருவர் தனது “மறைக்கப்பட்ட புற்றுநோயை” கண்டறிந்து தனது உயிரைக் காப்பாற்றியதற்காக ChatGPT-க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் மருத்துவர்கள் தனது அறிகுறிகளைப் புறக்கணித்து, அவற்றை முடக்கு வாதம் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாளடைவில் எடை இழப்பை அவதானித்த பிறகு ChatGPTயிடம் கேட்ட பிறகு சாட்போட் தனக்கு ஹாஷிமோட்டோ நோய் இருக்கலாம் என்று பரிந்துறைத்ததாகவும், பிறகு அவர் தைராய்டை ஸ்கேன் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவருக்கு கழுத்தில் இரண்டு சிறிய கட்டிகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்ததுடன், அவை புற்றுநோய் என்பதையும் உறுதிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.