கிப்லி புகைப்படங்களால் கடும் கோபமடைந்த ChatGPT நிர்வாக அதிகாரி

கிப்லி புகைப்படங்கள் டிரெண்டிங்கில் உள்ள நிலையில், சமாளிக்க முடியாத நிலைக்கு ChatGPT ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் வேதனை தெரிவித்துள்ளார்.
சமூகவலைளதளங்களில் விளையாட்டாக ஆரம்பிக்கும் ஒன்று மிகப்பெரிய டிரெண்டிங்கில் சென்று முடிகிறது. திடீரென ஒரு விஷயம் டிரெண்டிங் என்று யாராவது சொல்லிவிட்டால் அது ஏன் டிரெண்டிங் ஆகிறது, அதற்கு காரணம் என்ன என்று எல்லாம் ஆராயமாட்டார்கள்.
உடனே அதனுடன் சேர்ந்து அவர்களும் அதனை பகிர ஆரம்பித்துவிடுகிறார்கள். அதுப்போன்று தான் கிப்லி புகைப்படத்தை ஒரு சிலர் சமூக வலைதளத்தில் பகிர ஆரம்பித்த ஒரு மிகப்பெரிய கூட்டமே தாங்களும் அதனை பகிர்ந்து சாட்ஜிபிடிக்கு ஒரு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளனர்.
சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ள கிப்லி புகைப்பட டிரெண்டிங், தங்களுக்கு தலைவலியாக மாறி உள்ளதென்று சாட்ஜிபிடி சிஇஓ வேதனை தெரிவித்துள்ளார். ஜப்பானினின் பிரபல அனிமேஷன் ஸ்டுடியோ, கிப்லி அனிமேஷன். இதன் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போன்றே, நிஜ உலக புகைப்படங்களை மாற்றுவதுதான் தற்போது ட்ரெண்டாகி உள்ளது.
அதாவது, சாட்ஜிபிடியின் புதிய அம்சத்தை பயன்படுத்தி பயனர்கள் தங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், மீம்ஸ்களை கிப்லி பாணியில் மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அரசியல், திரைப்படம், விளையாட்டுத்துறை பிரபலங்கள் தொடங்கி பொதுமக்கள் வரை அனைவரும் இந்த கிப்லி புகைப்படங்களை உருவாக்க ஆர்வம் காட்டும் நிலையில், சமாளிக்க முடியாத நிலைக்கு ChatGPT ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் வேதனை தெரிவித்துள்ளார்.
கிப்லி புகைப்படங்களை உருவாக்கும் முயற்சி கட்டுக்கடாங்காமல் செல்லும் நிலையில், இது பைத்தியக்காரத்தனம் என்றும் கடுமையாக சாடியுள்ளார் சாம். பயனர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் தங்கள் குழுவுக்கு தூக்கம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.