பிரான்ஸில் வேலை தேடுவோரின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பிரான்ஸில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வருடத்தின் மூன்றாவது காலாண்டில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
இரண்டாவது காலாண்டில் 7.2% சதவீதமாக இருந்த வேலையில்லாதோர் எண்ணிக்கை 0.2% சதவீதத்தால் அதிகரித்து தற்போது 7.4% சதவீதமாக உள்ளது.
இத்தகவலை INSEE நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அதிகரிப்பு நாம் எதிர்பார்த்தது தான். உலக பொருளாதார சரிவின் ஒரு பகுதியாக இது உள்ளதென பிரெஞ்சு தொழிலாளர் அமைச்சர் Olivier Dussopt தெரிவித்தார்.
அதேவேளை, பணவீக்கம் மெல்ல மெல்ல சீரடைந்து வருகிறது. கடந்த செப்டம்பரில் 4.9% சதவீதமாக இருந்த பணவீக்கம் ஒக்டோபரில் 4% சவீதமாக குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)