ஜெர்மனியில் பணியாற்றும் நேரத்தில் மாற்றம்? விடுக்கப்பட்ட கோரிக்கை
ஜெர்மனியில் வேலை செய்யும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
cdu எனும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
நாட்டில் தற்போதுள்ள நடைமுறையில் மாற்றம் செய்து, ஊழியர்கள் விரும்பும் நேர அளவில் பணியாற்றிய வாய்ப்பு வழங்க வேண்டும் என அக்கட்சியின் பிரதித் தலைவர் ஜென்ஸ்பான் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய நடைமுறைக்கு அமைய நாளொன்றுக்கு எட்டு மணித்தியாலங்கள் பணியாற்ற வேண்டும் என்பது சட்டமாக உள்ளது.
சமகாலத்தில் உலகம் டிஜிட்டல் மயமாகி வருகின்றமை தொடர்பில் ஜேர்மன் அரசாங்கமும் கவனம் செலுத்தி மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
அதற்கமைய பணியாற்றும் கால எல்லையை எட்டு என வரையறுக்காமல் பணியாளர், எத்தனை மணித்தியாலங்கள் பணியாற்ற முடியும் என அவர்களே தீர்மானிக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும்.
இது தொடர்பில் வேலைவாய்ப்பினை வழங்கும் தொழில் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனவும் cdu கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் கட்சியின் கோரிக்கைக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன. பொருத்தமற்ற கோரிக்கைகளை அரசியல்வாதிகள் முன்வைக்கக் கூடாது என அவை சாடியுள்ளன.
தற்போதைய காலப்பகுதிக்கு பணிநேரத்தில் மாற்றங்களை மேற்கொள்வது சாத்தியமில்லாத விடயம் என தொழிற்சங்ககள் சுட்டிக்காட்டியுள்ளன.