ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக கடமையாற்றிய லசந்த அழகியவன்ன மற்றும் திரு.மகிந்த அமரவீர ஆகியோர் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30.03) கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில், நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





