பிரித்தானியாவின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் – வரி உயர்வு தொடர்பில் பரிசீலனை!

G7 நாடுகளின் மத்தியில் பிரித்தானியாவின் பணவீக்கம் மிக அதிகமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் பணவீக்கம் 3.4 சதவீதமாக இருக்கும் எனவும், 2026 ஆம் ஆண்டில் 2.5 சதவீதமாக இருக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய பிரித்தானியாவில் உணவு, விருந்தோம்பல், தொழிலாளர் மற்றும் வரி செலவுகளை துரிதப்படுத்துவது ஆகிய காரணிகள் பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில் 1.3 சதவீதம் குறைவாகவே இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை உலக வர்த்தக அழுத்தங்கள் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை சான்சலர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்கமைய வரவிருக்கும் வரவு செலவு திட்டத்தில் வரி உயர்வு மற்றும் செலவு குறைப்புகளை மேற்கொள்வது தொடர்பில் பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.