கைது செய்யப்படுகின்றாரா விஜய்? தமிழகத்தில் பரபரப்பு
கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய அரசியல் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், புஸ்ஸி ஆனந்த், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது கரூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை கட்சியின் தலைவர் விஜய் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
‘புஷ்பா-2’ திரைப்பட ரிலீஸின்போது ஐதராபாத் தரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.
அதேபோல் விஜய்யும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கட்சி தலைவரே பொறுப்பு என சென்னை மேல் நீதிமன்றம் கூறியிருந்தது.
இதனால் விஜய் உட்பட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிலர் கைது செய்யப்பட வாய்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





