Champions Trophy – தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் விலகல்
8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19ம் தேதி தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் அடுத்த மாதம் 21ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் சாம்பியன்ஸ் டிராபி தொடரை தென் ஆப்பிரிக்க அணி தொடங்குகிறது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ஜே திடீரென விலகியுள்ளார்.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது விலகல் தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)