செய்தி விளையாட்டு

12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஆரம்பமாகும் சாம்பியன்ஸ் லீக் தொடர்

சாம்பியன்ஸ் லீக் T20 தொடரை மீண்டும் நடத்த ஐசிசி அனுமதி தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த வருடம் செப்டம்பரில் இத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ரசிகர்களின் போதிய ஆதரவின்மை மற்றும் ஸ்பான்சர்ஷிப் பிரச்சனைகள் காரணமாக 2015ம் ஆண்டு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது.

2009 – 2014 வரை நடைபெற்ற அந்தத் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 2 கோப்பைகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின் அடுத்தாண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் நடத்தப்படவுள்ளது.

இதில், இந்தியாவின் ஐபிஎல் தொடர், பாகிஸ்தானின் பிஎஸ்எல், ஆஸ்திரேலியாவின் BBL, தென்னாப்பிரிக்காவின் SA20, இங்கிலாந்தின் THE HUNDRED போன்ற உலகெங்கிலும் உள்ள ஃபிரான்சைஸ் தொடர்களில் பட்டம் வென்ற அணிகளை ஒருங்கிணைத்து பிரமாண்ட தொடராக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி