வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் இலங்கை மத்திய வங்கி!
மத்திய வங்கியின் (CB) பரிந்துரையின் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஆறு மாத காலத்திற்கு வெளியிலிருந்து பணம் அனுப்புவதற்கு விதிக்கப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உத்தரவுகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள சில இடைநிறுத்தங்கள்/கட்டுப்பாடுகளை மேலும் திருத்துவதன் மூலம் ஜூன் 2025 வரை அமுலுக்கு வரும் வகையில் புதிய உத்தரவுகளை வழங்குவது பொருத்தமானது என இலங்கை மத்திய வங்கி முன்மொழிந்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் 20-12-2024 இலிருந்து ஆறு (6) மாத காலத்திற்கு உத்தரவுகளை வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை கோரியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த திருத்தங்கள் பற்றிய விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிடவில்லை. தற்போதைய உத்தரவின் செல்லுபடியாகும் காலம் நேற்றுடன் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.