இந்தியா செய்தி

‘கலைஞர் 100’ விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழா பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.

அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதி ‘கலைஞர் 100’ விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட ‘கலைஞர் 100 விழா’ சென்னை கிண்டியில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில், திரைத்துறையை சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, அருண் விஜய், விஜயகுமார், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அதைப்போல, இயக்குனர்கள் சங்கர், லோகேஷ் கனகராஜ், நடிகை நயன்தாரா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். மேலும், ஆந்திர மாநில அமைச்சரும், நடிகையுமான ரோஜாவும் ‘கலைஞர் 100’ விழாவில் பங்கேற்றுள்ளார்.

 

(Visited 15 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி