ஆப்பிரிக்கா

சூடானில் சண்டை நிறுத்தம் அறிவிப்பு!

சூடானில் இஸ்லாமிய மக்கள் கொண்டாடும் ஈத் அல்-ஆதாவின் முதல் நாளை முன்னிட்டு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் துணை இராணுவத்தினரின் பிடியில் இருந்த 125 சூடான் இராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

சூடானில் ஜெனரல் அப்தெல்-ஃபத்தா புர்ஹான் தலைமையிலான இராணுவத்திற்கும்>  ஜெனரல் முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான வன்முறை மோதல்கள் 11 வாரகாலமாக நடைபெற்று வருகின்றன.

இந்த மோதலில் ஏறக்குறைய 3000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி  2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்இ இந்த வார தொடக்கத்தில்  முஸ்லிம் பண்டிகையான ஈத் அல்-ஆதாவின் முதல் நாளைக் குறிக்கும் வகையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!