அயர்லாந்து ஜனாதிபதித் தேர்தலில் கேத்தரின் கோனோலி(Catherine Connolly) அமோக வெற்றி
இடதுசாரி சுயேச்சை (Left-wing independent) வேட்பாளர் கேத்தரின் கோனொலி (Catherine Connolly) அயர்லாந்து ஜனாதிபதித் தேர்தலில் ஃபைன் கேல் (Fine Gael) கட்சியின் ஹீதர் ஹம்ப்ரியை (Heather Humphrey) வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
வழக்கறிஞரும், சட்டமன்ற உறுப்பினரும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்படையான விமர்சகருமான 68 வயதான கேத்தரின் கோனொலி 63 சதவீத வாக்குகளை பெற்று வெற்றியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
துணைப் பிரதமரும் ஃபைன் கேல் கட்சியின் தலைவருமான சைமன் ஹாரிஸ் (Simon Harris), “கோனொலியின் வெற்றி அயர்லாந்தின் வெற்றியாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கேத்தரின் கோனொலி அயர்லாந்தின் 10வது ஜனாதிபதியாகவும், இந்தப் பதவியை வகிக்கும் மூன்றாவது பெண்மணியாகவும் உள்ளார்.
2016 முதல் முன்னாள் வழக்கறிஞரும் சுதந்திர சட்டமியற்றுபவருமான கோனோலி, காசாவில் இஸ்ரேலின் போர் தொடர்பாக இஸ்ரேலை வெளிப்படையாக விமர்சித்தவர் ஆவார்.





