இலங்கை

சிங்கப்பூரில் பூனைகளைத் துன்புறுத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு

சிங்கப்பூரில் பாடசாலைகளில் விலங்குநலப் பாடங்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு, கற்பிக்கப்படுவதாகக் கல்வி அமைச்சுக்கான துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் தெரிவித்துள்ளார்.

விலங்கு நலனைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பாடசாலைகளுடன் பெற்றோர், சமூகப் பங்காளிகள் ஆகியோரும் ஏற்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பூனைகளைத் துன்புறுத்தும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக விலங்கு வதைத் தடுப்புச் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு மட்டுமே இதுவரை 11 சம்பவங்கள் பதிவாகின. கடந்த ஆண்டு முழுமைக்கும் 16 சம்பவங்கள் ஏற்பட்டன.

பாடசாலைகளின் குடியியல் கல்வி, சமூகக் கல்வி, அறிவியல் ஆகிய பாடங்களில் விலங்குநலம் தற்போது கற்பிக்கப்படுகின்றன.

பொறுப்பான செல்லப்பிராணி உரிமையாளராக இருப்பது முதல், சமூக, சுற்றுச்சுழல் விவகாரங்களில் எவ்வாறு மாற்றத்தைக் கொண்டுவரலாம் என்பது வரை பள்ளிகளில் கற்பிக்கப்படுவதாக கான் குறிப்பிட்டார்.

 

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!